கனடாவின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Monday, November 13th, 2023

கனடா மீதான தனது எதிர்ப்பையும், மனித உரிமைகள் மீதான அந்நாட்டின் இரட்டை நிலைப்பாட்டையும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் கனடா உண்மையான அக்கறை காட்டவில்லை எனவும் மாறாக வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்திலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலானிலும் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக கனடா வாக்களித்ததை தனது சமீபத்திய வலைதள பதிவில் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

“கனடா எப்படி வாக்களித்தது என்று பாருங்கள் , பாசாங்குத்தனமான இரட்டைத் தரத்தைப் பார்க்கிறீர்களா?, அவர்கள் இலங்கையில் மனித உரிமைகள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் துரதிர்ஷ்டவசமாக தவறாக நினைக்கிறீர்கள்! எல்லா வழிகளிலும் வாக்கு வங்கி அரசியல்தான்!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 145 நாடுகளில் இந்தியாவும் அடங்கும். நவம்பர் ஒன்பதாம் திகதி குறித்த தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: