கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அவுஸ்திரேலியா மேலும் நிதியுதவி!

நாட்டில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக அவுஸ்திரேலிய மேலும் 7 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்கவுள்ளது.
சமுக ஒருமைப்பாட்டுக்கான டெல்வோன் உதவு அமைப்பு மற்றும் மைன் அக்ஷன் குழு என்பவற்றின் பங்களிப்புடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த நிதியுதவியை வழங்குகிறது.
கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ள மக்கள், தங்களது சொந்த இடங்களில் குடியேற வாய்ப்புகிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 2 பில்லியன் ரூபாய் வரையில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு நோயினால் 269 பேர் உயிரிழப்பு!
நாய்க் கடிக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவனும் பெண்ணும் பலி!
ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்...
|
|