கண்டியில் ஏற்பட்ட பதற்றத்தால் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்!

Monday, March 5th, 2018

கண்டி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து உடன் அமுலாகும் வகையில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கியதில் அவர் பலியானார்.

குறித்த சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு தீ மூட்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது. மேலும் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் அந்தப் பகுதிக்கு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலாகும் வகையில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: