கணித பாடம் தொடர்பில் கல்வியமைச்சு விசேட திட்டம்!
Friday, August 9th, 2019
கணித பாடத்தை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விருப்பமான பாடமாக்குவதற்காக கல்வியமைச்சு விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கணிதம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புப்படுத்தி மாணவர்களுக்கு இலகுவாக புரிந்துகொள்ளும் வகையிலான செயல்பாடுகள் இதன் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வருடம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்த விகிதம் நூற்றுக்கு 68 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், அதனை மேலும் வளர்ச்சியடைய செய்ய இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் ...
செப்ரெம்பர் மாதத்துக்குள் நாட்டின் சனத்தொகையில் அதிக சதவீதமானோருக்குத் தடுப்பூசி வழங்கப்படும் - ஜனா...
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் -...
|
|
|


