கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தி!

Tuesday, October 17th, 2023

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இது தொடர்பில், நாடாளுமன்றில் இன்றையதினம் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றதாக  நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது நிதி கண்காணிப்புக் குழுவாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கருதப்படுகிறது.

ஐ.ஆர்.தம்பிமுத்துவினால் சட்டவாக்கப் பேரவையில் 1921 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: