கடும் வறட்சி: வட மாகாணத்தைச் சேர்ந்த 4 ,62,815 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 83,000 க்கும் அதிகமானவர்கள் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பளை – இயக்கச்சி மக்கள் தமது நாளாந்த தேவைக்கான நீரைப் பெற்றுக்கொள்ள பாரிய இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஆணையிறவு, உப்பளத்திற்கு சொந்தமான கிணற்றிலிருந்து வரையறைக்குட்படுத்தப்பட்டு நீர் வழங்கப்படுவதாகவும் எனினும் அது போதுமானதாக இல்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவும் வறட்சியினால் வட மாகாணத்தைச் சேர்ந்த 4 ,62,815 பேர், நீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம்!
யாழ். வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா !
ஜனவரியில் நல்லிணக்க வாரம்!
|
|