கடும் உஷ்ணம்: நாட்டு மக்களுக்கு வைத்தியர்கள் விசேட எச்சரிக்கை!
Monday, April 23rd, 2018
நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை ஒன்றை வைத்தியர்ள் விடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால், அநாவசியமாக வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதிக உஷ்ணமாக காலநிலையின் காரணமாக சிறுவர்களின் உடலில் வறட்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்குமாறு வைத்தியர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபத்தான நிலைமைகள் ஏற்படக் கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆபத்துக்களில் இருந்து தப்பிக் கொள்ள அதிக நீர் அருந்த வேண்டும் என வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி - அமைச்சர் மங்கள சமரவீர!
தாமதமான கொடுப்பனவுகளை வழங்குமாறு ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!
இலங்கைக்காக ஏனைய நாடுகளுடன் செயற்பட தயார் - சீனா அறிவிப்பு!
|
|
|


