கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
Thursday, May 5th, 2022
கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாக, நேற்றையதினம் அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு நேற்றுமுன்தினம் (3) பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக திணைக்களத்தின் ஒரு நாள் சேவையில் தாமதம் ஏற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த திடீர் செயலிழப்பு சரிசெய்யப்பட்டு வழமையான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேற்று (4) குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்றையதினம் கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


