கடமை நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமை – பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு!
Saturday, January 20th, 2024
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் நேற்று சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது -கெஹெலிய.!
ஜிஎஸ்பி பிளஸ் : இலங்கைக்கான வரிச்சலுகையை மேலும் நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
வேலைநிறுத்தம் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல - புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு சாக...
|
|
|


