கடன் கொடுப்பனவுகளை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை 2027ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
எனினும், இந்த காலகட்டத்தில் வட்டி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர், 2042 ஆம் ஆண்டு வரை கடன் செலுத்தல் காலத்தை நீடிக்கும் வகையில், செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடன் சுமைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எனினும், இறக்குமதியை நம்பியிருப்பது மேலும் கடன் வாங்க வேண்டிய நிலையை உருவாக்கலாம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வறுமை 2019இல் 15 சதவீதத்திலிருந்து தற்போது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு உரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|