கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது!
Sunday, June 6th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
அவர்களில் அதிகமானோர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் நேற்றையதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் 129 பேரும், நிக்கவரட்டிய பிரதேசத்தில் 75 பேரும் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிபதிகளின் சம்பளங்கள் உயர்வு!
ஓய்வு பெறுவோரை சேவையில் இணைக்க நிறுவக பிரதானியின் அனுமதி கட்டாயமானது - அரச சேவை அமைச்சின் செயலாளர் அ...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான பயணம் ஒத்திவைப்பு!
|
|
|


