கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் அபாயமுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கள் நுழைந்த பயணிகளை கண்டறிய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Wednesday, December 1st, 2021

கொரோனாவின் புதிய பிறழ்வாக அடையளாம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் எந்தவொரு தனிநபரோ அல்லது தரப்பினரோ இலங்கைக்கு விஜயம் செய்தார்களா என சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சரான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

புதிய ஒமிக்ரோன் பிறழ்வு அபாயம் உள்ள 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமைமுதல் தடை விதித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பிறழ்வை கண்டறிய கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பிறழ்வு பரவும் அபாயத்தையும் அது இறப்பு விகிதத்தை எவ்வாறு பாதிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

எவ்வாறாயினும், நோயாளர் முகாமைத்துவம் மற்றும் சிகிச்சை முறைகள் ஏனைய வகைகளை போலவே உள்ளன,

மேலும் முகக்கவசங்களை அணிவது, ஒரு மீட்டர் தூரத்தை பராமரிப்பது மற்றும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது போன்ற சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது முக்கியம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: