கடதாசி தொழிற்சாலையை புனரமைக்க முயற்சி!
Friday, October 27th, 2017
அரச, தனியார் துறை பங்களிப்பு திட்டத்தின் மூலம் வாழைச்சேனை எம்பிலிப்பிட்டிய தேசிய கடதாசி தொழிற்சாலைகள் இரண்டும் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தென்கொரியா, இலங்கைக்கு வழங்கும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் , ஜேர்மன் ஓயின் நிறுவனத்தில் தெற்காசிய வலயத்திற்கு பொறுப்பான இந்தியாவில் செயற்படும் எஸ்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் புதிய திட்டத்தை முன்னெடுப்பதற்கு வாழைச்சேனை தேசிய கடதாசி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி மங்கள சி. செனரத் செயல்படுகின்றார்
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரது இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பான அரச மற்றும் தனியார் கூட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
|
|
|


