ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழை 25ற்கு முன் சமர்ப்பிக்கவும்!
Friday, January 13th, 2017
நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்க தவறுபவர்கள் பிரதேச செயலர் பிரிவுக்குள் வதிவதில்லை எனக் கருத்திற் கொண்டு எதிர்வரும் பங்குனி மாதத்திலிருந்து ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படும் அத்துடன் ஓய்வூதிய புகையிரத ஆணைச்சீட்டு இவ்வருடம் முதல் தரவுத் தளத்தினூடாக வழங்குவதனால் அதற்குரிய விண்ணப்பபடிவத்தையும் உரிய கிராம அலுவலரிடம் பூர்த்தி செய்து அதனை பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலதிக விபரங்களை தங்கள் பிரிவு கிராம அலுவலரிடம் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதேச செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!
நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த சட்டமூலத்தை சான்றுப்படுத்தினார் சபாநாயகர்!
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரம் - பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!
|
|
|
ஜனவரி 1 முதல் இலங்கை வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்படுகிறது புதிய நடைமுறை...
சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர் அறிவிப்பு...
இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்ட பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாள...


