ஒன்பது இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!

இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதுடன், யாழ் மாவட்ட கடற் தொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்கள் அனைவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாவகச்சேரி நகராட்சி மன்ற தேர்தலில் ஒன்பது கட்சிகள் போட்டி!
உண்மைக்குப் புறம்பான விடயங்கள்: யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவிடம் இலங்கை கோ...
நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்கள் - பாதுகாப்பு சேவையில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையி...
|
|