ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (புதன்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் போது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இதேவேளை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை பிரகடன அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ஜனவரி 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பல்கலை மோதல் வழக்கு ஒத்திவைப்பு!
ஜனாதிபதியின் முக்கிய கோரிக்கை!
அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22 ஆயிரம் பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங...
|
|