ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டியதில்லை – கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே கச்சத்தீவு விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதனை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமை குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயத்தை பற்றி தற்போது பேச தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார்   ‘‘இலங்கையின் பன்முகத்தன்மையை பலமாக மாற்ற வேண்டும். பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து வாழ வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.

செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.

பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. அதை புரிந்து கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ஒருவரே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்.

நாடு வீழ்ந்தால் நாட்டின் அனைத்து இனங்களும் வீழ்ச்சியடையும், நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். மேலும் பல வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நாடு வீழ்ச்சியடைந்த போது நாட்டை வழிநடத்தியது யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: