ஐந்து பல்கலைக்கழக மாணவர்களை காணவில்லை!
Sunday, July 17th, 2016
ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவென நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலைக்கு சென்ற 5 பேர் கொண்ட குழுவினர் காணாமல் போயுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கும் பொலிஸார் ஏனையோர் உள்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கின்றனர்.
இவர்கள் பல்கலைகழக மாணவர்கள் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று மாலை காணாமல் போயுள்ள இவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைது!
ஜனாதிபதியிடம் தீயணைப்பு வண்டிகள் கையளிப்பு!
அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
|
|
|


