ஐந்துமாடிக் கட்டடத்தில் பாரிய தீவிபத்து!

கண்டியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கட்டடத்தின் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பியுள்ளனர்.
சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
Related posts:
தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்த விசேட சட்டம் - மஹிந்த தேசப்பிரிய !
ஆபத்தான கட்டத்தில் இலங்கை? – அறிக்கை வெளிழயிட்டது அமெரிக்கா பல்கலைக்கழகம் !
பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு மாற்றீடாக அரிசிக் கஞ்சி - விவசாய அமைச்சு தகவல்!
|
|