ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்!
Tuesday, December 6th, 2016
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியரை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்காக குறைந்தபட்ச புள்ளிகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவ, மாணவியரின் புள்ளிகளை கணனி மயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப் புள்ளி விபரங்கள் இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
இந்து சமயத்தில் இருந்தே பெளத்த தர்மம் உருவானது - நாக விகாரை விகாராதிபதி!
எரிபொருள் வீண் விரயத்தை கட்டுப்படுத்த புதிய எரிபொருள் கட்டமைப்பு - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ ...
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|
|


