ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு நிபுணர்கள் குழு இலங்கை வருகிறது!

Thursday, June 20th, 2019

ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய துறைசார் பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளிட்ட மெட்ரோபொலிட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திககள் வெளியாகியுள்ளன.

இந்த வாரத்தில் இந்த பயணம் இடம்பெறும் என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரீஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு நிபுணர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: