ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு பொலிசார் அறிவுறுத்து!
Monday, June 21st, 2021
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,இன்றையதினம் மேல்மாகாணத்தில் சுமார் 799 வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் இதில் 8 ஆயிரம் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பயணக்கட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைவாக நிறுவனங்கள் செயல்படுகின்றதா என்பதை கண்டறிவதில் கொழும்பிலும் அதனையடுத்துள்ள பிரதேசங்களிலும் ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


