ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பம்!
Thursday, March 25th, 2021
தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மீளத்திறக்கப்பட உள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி, குறித்த பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 5 ஆம், 11 ஆம் மற்றும் 13 ஆம் தரங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து தரங்களுக்கும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு - அமைச்சர் மங்கள சமரவீர!
பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம்!
அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு!
|
|
|


