எவன்ட் கார்ட் மூலம் கடற்படைக்கு 233 கோடி வருமானம்!
Tuesday, November 15th, 2016
எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவை தமது நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர் 233 கோடி ரூபா வருமானம் பெறப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவை கடந்த வருடம் நவம்பர் மாதம் 13ஆம் திகதி கடற்படை நிருவாகத்தின் கீழ் கொணடுவரப்பட்ட பின்னர் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. இக்காலப் பகுதியில் இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காலியில் அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு அலுவலகங்களுக்கிடையில் 6646 கப்பல்களுக்கான பயண சேவைகளுக்கு கடற்படை உதவியுள்ளது. மாதமொன்றுக்கு சராசரியாக 554 பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட வருமானத்தை அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்துக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளனர்

Related posts:
பொதுமக்கள் பார்வைக்குவரும் கொழும்பு துறைமுகம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தக...
ஜனாதிபதியின் பதில் செயலாளராக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் நியமனம்!
|
|
|


