எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் வெளியிடப்படும்!

Tuesday, January 24th, 2017

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக  உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

ஆத்துடன் இம்மாதம் 31ம் திகதியளவில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு எதிர்பார்பார்க்கப்பட்டுள்ளது.  உள்ளுராட்சி மன்ற பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிழைகளை திருத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழு குறிப்பிட்ட திருத்தங்களை தற்சமயம் மேற்கொண்டு வருவதாக திரு.பத்மசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் பரிந்துரைகளுக்கு அமைய உள்ளுராட்சி மன்ற சட்டமூலம் திருத்தியமைக்கப்படும். இதுவிடயம் தொடர்பான பிரேரணையின் பிரதியொன்று, தற்சமயம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திரு.பத்மசிறி மேலும் தெரிவித்தார்.

1790674906provincemini

Related posts:

ஸிகா வைரஸ் திரிபு - இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கை அவசியம் - சிறுவர் நோய் விசேட வைத்தி...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 இலட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசா...
சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்...