எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Monday, May 16th, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவை நேற்று இடம்பெற்றது.
நேற்றைய கூட்டத்தில் பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசலை பகிர்ந்தளிக்கு நடவடிக்கை இன்று முற்பகல்முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - ஜனாதிபதி கோட...
கடமைகளை பொறுப்பேற்றார் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க!
இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் - ரஷ்ய தூதுவர் தெரிவிப்ப...
|
|
|


