எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப் போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சகோதர மொழி வார இதழ் ஒன்றுக்களித்திருக்கும் நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன் கடந்த புதன்கிழமை தான் நடத்திய பேச்சுக்களின் போது இது தொடர்பாக ஆராயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
“எம்.சி.சி. உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திட்டால் தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக சிலர் சொல்கின்றார்கள். கனவில்கூட அந்த உடன்படிக்கையில் நான் கைச்சாத்திடப்போவதில்லை. சிலர் தமது ஆதரவாளர்களை உணர்வூட்ட இவ்வாறான உரைகளை நிகழ்த்துகின்றார்கள்” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மகோகனி மரத்தை வெட்ட முயற்சித்த 4 பேர் கைது!
தோல்வியை ஏற்றுக்கொண்ட சஜித் !
நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது - சில தரப்பினர் அரசியல் செய்ய முயற்சி என இராஜாங்க அம...
|
|