எனது கடமைகளை நான் நிறைவேற்றுவதற்கான பரிபூரண ஒத்துழைப்பையே அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன் – ஜனாதிபதி !

Sunday, October 18th, 2020

இந்த நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடே எனக்கு உண்டு. அதுவே எனது பொறுப்பும் ஆகும். அதற்காகவே எனக்கு சர்வஜன அதிகாரம் தரப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூலில் மேலும் ஜனாதிபதி குறிப்பிடுகையில் –

வலுவான நிறைவேற்றுத் துறையும், நியாயமான சட்டவாக்கத் துறையும், தன்னாதிக்கமுள்ள நீதித் துறையும் – எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும், அதன் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தேவைப்படுகிறன.

ஆகையால் – அனைத்துத் தரப்புகளும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, நாட்டின் நலன் கருதி, மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான தேசிய நோக்கையும் கடமையையும் நிறைவேற்றவே பயன்படுத்த வேண்டியுள்ளது. அதனால் – எனது கடமைகளை நான் நிறைவேற்றுவதற்கான பரிபூரண ஒத்துழைப்பையே – அரச பணியாளர்களிடமிருந்தும் சட்டவாக்கத் துறையினரிடமிருந்தும் நீதித் துறையிடமிருந்தும் நான் எதிர்பார்க்கின்றேனே அல்லாமல், எந்தவிதமான தடைகளையும் எந்த தரப்பிடமிருந்தும் நான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: