எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, May 15th, 2022
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சைக்கு தேவையான கண்காணிப்பு பணிக்குழாமினரும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை - வலுசக்தி அமை...
|
|
|


