எதிர்வரும் 12 ஆம் திகதி ஒரு இலட்சம் ரஷ்ய தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Wednesday, April 7th, 2021
ஸ்புட்னிக் V தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம் தடுப்பூசிகளின் முதற் தொகுதியே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக அந்தக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஏனையவற்றை மாதாந்தம் நாட்டிற்கு வழங்குவதற்கு அந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளே எதிர்வரும் 12ஆம் திகதி கிடைக்கவுள்ளன.
இதேவேளை, ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்கும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்க குடிவரவு குடியகல்வு கொள்கையில் மாற்றம்!
யாழ் - கொழும்பு சொகுசு ரயில் சேவை ஆரம்பம் - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|
சீன அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி - நாட்டின் அந்நிய செலாவண...
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்த இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர...
பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ...


