எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை!

Tuesday, June 8th, 2021

நாடளாவிய ரீதியில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் அந்நாளில் திறந்து வைக்கப்படுவதுடன், முப்படையினரால் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தடையின்றி வங்கிச் சேவைகளை வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி, அங்கீகாரம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்துள்ளது.

தமது வங்கிச் சேவைகள் தொடர்பாக உரிமம் பெற்ற தனியார் வங்கிகளால் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அடுத்தே மத்திய வங்கி தமது அறிவுறுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் அத்தியாவசிய சேவை என்ற வகையில் அங்கீகாரம் பெற்ற வங்கிகள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வங்கி கிளைகளை திறந்து வைத்து தமது வாடிக்கையாளர்களுக்கு இடையூறற்ற சேவைகளை வழங்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: