எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Monday, January 22nd, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகர்களிடம் இருந்தும் வட் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எதிர்வரும் 21ஆம் திகதி சூரியக்கிரகணம்!
விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் - பிரதமர...
வன்முறைக் கும்பலை தேடி கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!
|
|
|


