எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவர் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அறிவிப்பு!
 Saturday, March 16th, 2024
        
                    Saturday, March 16th, 2024
            
2002 கிராம உத்தியோகத்தர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடமாகவுள்ள 2002 கிராம உத்தியோகத்தர் பகுதிகளுக்கான கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வந்து தற்போது பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக் குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        