எட்கா ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம்!
Tuesday, February 20th, 2024
எட்கா எனப்படும் உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, இந்த ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தையை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது.
அதில் பங்கேற்காத முரண்பாட்டு தீர்ப்பு மற்றும் இறுதி ஏற்பாடுகள் தொடர்பான துணைக்குழு, புதுடெல்லியில் அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீனா - இலங்கை இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து இருநாட்டு மக்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உரு...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் தீர்மானம் ஒத்திவைப்பு - நீதி அமைச்சர் வ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் - வளிமண்டலவியல் திணை...
|
|
|


