எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து – இலங்கையின் சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை!

Tuesday, June 22nd, 2021

அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கையின் சுற்றாடல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அறிக்கையொன்றை தயாரிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.

எரிபொருள் கசிவு மற்றும் வேதியியல் தொடர்பான ஐ.நா தூதுக்குழுவொன்று தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் இலங்கைக்கு வந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடல் பகுதியில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு நிபுணர்கள் குழு நேற்று கப்பலை பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த நிபுணர் குழுவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். அவர் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிபுணர் குழு, கப்பலில் தீ ஏற்பட்டதற்கான காரணம், அதனுடன் தொடர்புடைய கடல் அமைப்பு, அத்துடன் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் வங்கி அதிகாரிகள் - சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு ...
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உ...
நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முடியுமா? - எங்கு இடம்பெற்றாலும் குற்றம...