ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க நடவடிக்கை!
Sunday, April 2nd, 2017
தனியார் மற்றும் அரசசார்ப்பு நிறுவனங்களில் பணியாற்றும் அனர்த்தங்களின் போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவிக்கையில் . அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிதி போதுமானதல்ல.
தொழிலில் ஈடுபட்டுள்ள வேளையில் அனர்த்தங்களினால் ஏற்படும் மரணங்களுக்கு தற்சமயம்; ஐந்து இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இந்த தொகை பத்து இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும். அவர்களது குடும்பத்தினருக்காக வழங்கப்படும் தொகை பத்து இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவிருக்கிறது. பத்துப் பேருக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் காப்புறுதியை வழங்க நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்!
கொவிட் 19 : உலகம் முழுவதும் 663,740 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!
|
|
|
வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எவரது அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து நிறுத்த மாட்டேன் - ஜனாதிபத...
அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம் - அமைச்சர் விமல் வீ...
அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குங்கள் - அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய க...


