ஊரடங்கு உத்தரவு மீறிய குற்றம்; இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, April 15th, 2020

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களிலும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகள் என்ற போர்வையில் பெறப்படும் அனுமதிகளுடன் பல்வேறு மோசடி வேலைகள் இடம்பெற்று வருவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு உத்தவை மீறிய மேலும் 1,522 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 306 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும். அதன்படி இதுவரையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 28,159 பேர் கைதாகி்யுள்ளதோடு, 7,105 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: