ஊரடங்குச் சட்டம்: மீறிய 25031 பேர் இதுவரையில் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
Tuesday, April 14th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 25031 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 354 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6426 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மக்கள் சோலை வரி செலுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது – வவுனியா நகரசபை செயலாளர் தெரிவிப்பு!
பிணை முறி விநியோகம் தொடர்பில் புதிய தகவல்!
கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்...
|
|
|


