ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடகப் பிரிவு!
Saturday, May 16th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12000 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி முதல் இன்று காலை 6.00 மணி வரையில் 12482 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 205 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி, மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 55506 கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15126 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு !தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் பேஸ்புக் தடை வருமா?
விதிகளை மீறிய 13,320 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் - ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்ப...
|
|
|


