ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சுயாதீன ஊடக ஆணைக்குழு!
Thursday, July 28th, 2016
ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து ஆராய்ந்துவருகின்றோம். இதனை நாங்கள் தனித்து செய்யமாட்டோம். இதற்காக சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனராட்ன தெரிவித்தார்.
அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஆசிரியர்களுடனும் ஆலோசனை நடத்தியே இதனை முன்னெடுப்போம்.இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Related posts:
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 915ஆக உயர்வு – தொற்றாளர்களில் 480 பேர் கடற்படை சிப்பாய்கள் ...
வாள்வெட்டக்கு இலக்காகி குடும்பப் பெண் படுகாயம் - மீசாலை வடக்கில் சம்பவம்!
சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களை வழங்க அனுமதி!
|
|
|


