உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை!

முட்டை, கோழி இறைச்சி, டின் மீன் மற்றும் கருவாடு என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த தடையுத்தரவு விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் யோசனைத் திட்டமொன்று முன் வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரியாலை மத்தி - தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவ...
வைத்தியரை நியமிக்க கோரிப் போராட்டம்!
இணையவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரால் மிரட்டப்பட்டால் உடன் நடவடிக்கை – பொலிசார...
|
|