உள்ளூராட்சி மன்ற தேர்தல்: ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அதிகாரிகள் கடமையில்!

இம்முறை தேர்தல் பணிகளில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அதிகாரிகள் கடமை புரியவுள்ளனர். தேர்தல் சட்ட விதிகளுக்கமைய வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் முகவர்கள்இ உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களைத் தவிர்ந்த ஏனையோருக்கு உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் கடவுச்சீட்டு சாரதி அனுமதிப்பத்திரம் ஓய்வூதிய அட்டைமுதியோர் அடையாள அட்டை ஆட்பதிவுத் திணைக்களத்தால் மதகுருமார்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவிர்ந்த வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
எவ்வித அடையாள அட்டையும் இல்லாதவர்கள் தேர்தல்கள் திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட விசேட அடையாள அட்டையை உடன் எடுத்து வரமுடியுமென்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டை உடன் இருப்பின் வாக்களிக்கும்போது வாக்காளரின் பெயரை கண்டுபிடிப்பது இலகுவாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|