உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை!

Tuesday, February 27th, 2018

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சிடம் உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அமைச்சு கடந்த தினத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தது.

எனினும் மார்ச் 2ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  அந்த அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் அதற்குப் பொறுப்பான அமைச்சரால் மன்றங்கள் அமைக்கப்படும் திகதி அறிவிக்கப்பட வேண்டும் என அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவற்றை உரிய வகையில் செயற்படுத்த மேலும் ஒருவாரக்காலம் எடுக்கும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts:

பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் - எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக ...
கொரோனா பரவல் அதிகரிப்பு – யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படு...
நாகப்பட்டினம் - திருகோணமலை இடையில் எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பே...

அரசியலமைப்புக்கு முரணான வழிமுறையில் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் முயற்சிகள...
இலங்கையில் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்...
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணையை வெளியட்டது கல்வி அமைச்சு - மூன்றாம் தவணை 20...