உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, மார்ச் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்று நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் வழங்கப்படுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு!
அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்!
|
|