உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து – அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு ஏகமனதான இணக்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு ஏகமனதான இணக்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று (21) நடைபெற்ற அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
பிரதமரும், அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் ஏகமனதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|