உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

உள்ளுர் சந்தையில் தேங்காயின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் நடைபெற்ற இரண்டாவது தேங்காய் ஏலத்தில், ஆயிரம் தேங்காய்களின் விலை எழுபத்தாறாயிரத்து நானூற்று முப்பத்தெட்டு (76,438) ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதன் விலை அறுபத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஐந்து ஆக இருந்தது.
இதேநேரம் 722 163 தேங்காய்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன, அதில் 547 365 தேங்காய்கள் விற்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் மொத்த தேங்காய் ஏற்றுமதி நான்கு வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விமான நிலைய நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பம்!
எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
நீங்கள் சரியானதைச் செய்கின்றீர்கள் எனின், அதற்கான முடிவுகளைத் துணிந்து எடுக்க அச்சமடைய வேண்டாம் – அம...
|
|