உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Thursday, March 10th, 2022
ஆளும் கட்சி பிரச்சினைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்வதில் பயனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எந்தவொரு அரசாங்கத்திலும் சிலருக்கு இடையில் முரண்பாட்டு நிலைமைகள் நீடிப்பது வழமையானதே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னரும் சில கட்சிகள் இணைந்து நாட்டை ஆட்சி செய்துள்ளதாகவும் அப்போதும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும், அரசியல் அனுபவம் மிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறாது என்பதையும் உறுதியளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைபாடுகள், பிரச்சினைகள் இருந்தால் ஆளும் கட்சிக்கு உள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


