உலக சுகாதார உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன பங்கேற்பு!

Wednesday, May 17th, 2017

இம்மாதம் 22ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமுகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனீவா புறப்படவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார். மேலும், ‘அனைத்துப் பெண்கள் மற்றும் அனைத்துக் குழந்தைகள்’ என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள சந்திப்பிலும், கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் நீரிழிவு நோயை வெற்றிகொண்ட பெண்களின் கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

Related posts: