உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை – கட்டார்!

சில அரபு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என கட்டார் அறிவித்துள்ளது.
சவூதி, ஈஜிப்ட், டுபாய் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நியாயமற்றது எனவும் எந்த ஆதாரமும் இல்லாத கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காட்டருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக்கொள்ளுமாறு சவூதி அரேபியா ஏனைய அரபு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் தோஹாவுடனான உறவுகளை துண்டிப்பதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்!
ரஷ்ய,உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானம்!
இலங்கையில் வருடாந்தம் ஏறக்குறைய 150,000 பேர் பல்வேறு நோய்களினால் உயிரிழப்பு - நோய்த்தடுப்புச் சேவைகள...
|
|