உர மூடைகளை அதிக விலையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை!

1500 ரூபாவிற்கும் அதிமான விலையில் உர மூடை ஒன்று விற்பனை செய்யப்படுமாயின் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விடயம் குறித்து விவசாய அமைச்சரின் ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது
விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் முறையாக வழங்கப்படும் என்றும், கமநல சேவை அலுவலகங்களின் ஊடாக 500 ரூபாவிற்கும் சந்தையில் 1500 ரூபாவிற்கும் உரம் விற்பனைசெய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் விவசாய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைத்து விவசாய நிறுவனங்களையும் இணைத்த வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மகிந்தஅமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
'நாடா' சூறாவளி யாழ். குடாநாட்டில் மையம்: அவதானமாகச் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத...
யாழில் வீதிகளில் கழிவுகளை வீசிய 29 பேர் சிக்கினர்!
ஒன்று கூடினால் விளைவுகள் பாரதூரமான விழைவுகள் ஏற்படும் – ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறை எச்சரிக்கை!
|
|